வசமாக சிக்கிய இங்கிலாந்தின் பிபிசி செய்தி நிறுவனம்! வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை!
EB Case File Against BBC
இங்கிலாந்து நாட்டின் அரசு ஊடகமான பிபிசி செய்தி நிறுவனம் இந்தியாவிலும் தனது சேவையை செய்து வருகிறது. குறிப்பாக தமிழில் இந்நிறுவனம் பல ஆண்டுகளாகவே செய்திகளை வெளியிட்டு வருகிறது.
இந்தியாவில் கொடூரமான ஒரு ஆட்சியை செய்த வெள்ளையர்களின் மிச்சம் மீதி இந்த பிபிசி செய்தி நிறுவனம் என்று சொன்னால் மிகையாகாது என்றும், வெள்ளையர்களுக்கே உரித்தான மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை இந்நிறுவனமும் செய்துவருவதாக தேசிய பற்றாளர்களில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக இரண்டு ஆவணப் படங்களை பிபிசி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
அதில், இந்திய பிரதமரும் அப்போதைய குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இது இந்தியாவின் உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் விமர்சிக்கும் வகையில் அமைத்து இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இந்த ஆவண படத்திற்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவும் பிறப்பித்தது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காலை 11:30 மணியளவில் வருமானவரித்துறையினர் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
பிபிசி அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்களின் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை பறிமுதல் செய்து சுமார் 60 மணி நேர சோதனை நிறைவடைந்தது.
சோதனை குறித்து வருமான வரித்துறை சற்றுமுன் விடுத்துள்ள அறிக்கையில், பிபிசி குழும நிறுவனங்கள் கணக்கில் காட்டிய வருவாயும், இந்தியாவில் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரணாக உள்ளதாக அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் முதலீடு செய்ய முறையான அனுமதி பெறவில்லை என்று பிபிசிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து உள்ளது.