கத்தார் சிறையில் இருந்து இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை.! வெளியுறவுத் துறை தகவல்.!
eight Indian Navy personnel released from qatar jail
உளவு பார்த்ததாக எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் கத்தார் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், தற்போது அவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. அவர்களில் ஏழு பேர் இந்தியா வந்தடைந்துள்ளனர் என்று வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேர், நீர்மூழ்கி கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக கடந்த 2022 அக்டோபர் மாதம் கத்தார் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது.
இந்த வழக்கில் நீதிமன்றம் அவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கியதனைத் தொடர்ந்து அவர்களின் தண்டனையை குறைக்க இந்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால், அவர்களின் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டு சிறை தண்டனையாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த எட்டு முன்னாள் அதிகாரிகளையும் கத்தார் அரசு விடுதலை செய்துள்ளது. அவர்களில் ஏழு பேர் இந்தியா வந்தடைந்துள்ளனர் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
English Summary
eight Indian Navy personnel released from qatar jail