தெலுங்கானா.! எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பற்றிய தீயால் வீடு முழுவதும் எரிந்து நாசம்.!
Electric bike fire in Telangana
தெலுங்கானா மாநிலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பற்றிய தீயால் வீடு முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை அருகே டுப்பாக் மண்டல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவர் 4 மாதங்களுக்கு முன்பு வாங்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தனது வீட்டின் அருகே உள்ள பக்கத்து வீட்டில் சார்ஜ் செய்வதற்காக நிறுத்தி வைத்திருந்தார்.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் பேட்டரி வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து பற்றி எரிந்த தீயால் பக்கத்து வீடும் தீப்பிடித்து எரிந்து சேதமான நிலையில் வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Electric bike fire in Telangana