பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் அளித்தால் 1000 ரூபாய் வெகுமதி - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற மாநில அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, இந்தூரில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுப்போருக்கு 1000 ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த உத்தரவையடுத்து பிச்சைக்காரர்கள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிப்பதற்காக தனி மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:- "பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் கொடுப்பதற்காக வழங்கப்பட்ட எண்ணில் சுமார் 200 பேர் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அதில், 12 பேர் கொடுத்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேருக்கு தலா 1000 ரூபாய் வெகுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

பிச்சை எடுப்பதற்கான தடையை மீறுவோர் மீது பாரதிய நியாய் சன்ஹிதா சட்டத்தின் 223-வது பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறை தண்டனையும், 5,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

இந்தூரில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். 64 குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்றுத் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1000 rs money reward share beggers detailes in indore madhya pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->