மின்சார ஸ்கூட்டருக்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் கேட்டு அபராதம் விதித்த போலீசார்..!
electric scooter air pollution control certificate police fine
சுற்றுச்சூழலில் மாசை ஏற்படுத்தாத வகையில் தற்போது மின்சார கார், பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசலில் இல்லாமல் மின்சாரத்தில் இயங்கும் இந்த வகை கார், பைக்குகள் மாசை ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம் நீலஞ்சேரி பகுதியில் நேற்று மின்சார ஸ்கூட்டர் ஓட்டி வந்த நபருக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லை என கூறி போலீசார் அபராதம் விதித்துள்ளனர். 250 ரூபாய்க்கான அபராத ரசீதை போலீசார் ஸ்கூட்டர் உரிமையாளரிடம் வழங்கினர்.
மின்சார ஸ்கூட்டருக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் தேவையில்லாதபோது மாசுகட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லை என கூறி போலீசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து போலீசார் தரப்பில், ஸ்கூட்டரை ஓட்டிவந்த நபரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை எனவும், அதற்கான அபராத ரசீதுக்கு பதில் தவறுதலாக மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லை என ரசீது வழங்கப்பட்டுவிட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
English Summary
electric scooter air pollution control certificate police fine