மின்சார வாகனம் வெடித்து தீ விபத்து! பல கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் சேதம்!
Electric vehicle explosion fire accident
ஆந்திரா, விஜயவாடாவில் உள்ள இருசக்கர வாகனம் ஷோரூம் திடீரென தீ பற்றி 400 க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமாகின.
சென்னை-கொல்கத்தா விஜயவாடா கே.பி நகர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தனியார் நிறுவன இரு சக்கர ஷோரூமில் திடீரென தீ பற்றி விபத்துக்குள்ளானது.
இந்த ஷோரூம் முதல் தளத்தில் மின்சார வாகனங்களும் மற்றும் கீழ் தளத்தில் பெட்ரோல் வாகனங்களும் இருந்தன. அதேநேரத்தில் சர்வீஸ் சென்டரும் ஷோரூமில் இயங்கி வந்தது.
இந்த நிலையில் அங்கிருந்த மின்சார வாகனம் திடீரென வெடித்ததில் அனைத்து வாகனங்களுக்கும் தீ வேகமாக பரவத் தொடங்கியது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர். இருப்பினும் 400 க்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எறிந்து சாம்பலாகின.
இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் எரிந்து சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் போலீசார் இந்த தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Electric vehicle explosion fire accident