'அக்னிபத்' திட்டத்தில் பணிபுரிந்த வீரர்களுக்கு ரெயில்வே துறையில் வேலைவாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


'அக்னிபத்' திட்டத்தில் பணிபுரிந்த வீரர்களுக்கு ரெயில்வே துறையில் வேலைவாய்ப்பு.!

இந்திய ராணுவத்தில் முப்படைகளில் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்வதற்காக மத்திய அரசு, 'அக்னிபத்' என்றது திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் வீரர்களில் 4 ஆண்டுகளுக்கு பிறகு 25 சதவீத வீரர்கள் மட்டும் பணியில் நீடிக்கலாம். 

மற்றவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அதனால், இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் இளைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், 'அக்னிபத்' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுகள் பணியை முடித்த வீரர்களுக்கு ரெயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, வயது சலுகை உள்ளிட்டவை வழங்க ரெயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது. 

அதாவது, பணியிடங்களில் பத்து சதவீத இடஒதுக்கீடும், லெவல் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு ஐந்து சதவீத இடஒதுக்கீடும் அளிக்கப்படும். 

மேலும், முதல் பேட்ச் அக்னிவீரர்களுக்கு வயது உச்சவரம்பில் ஐந்து ஆண்டுகளும், அடுத்த பேட்ச் அக்னிவீரர்களுக்கு மூன்று ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், உடல் தகுதி தேர்வில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

employment of railway department to agnibath soldiers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->