சாத்தன்குளம் இன்ஸ்பெக்டர் அதிரடியாக கைது!...பின்னணியில் ரூ.1.47 கோடி!...நடந்தது என்ன?
Sathankulam inspector arrested in action rupees 1 and 47 crore in the background what happened
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.47 கோடி பண மோசடி செய்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக ஏசுராஜசேகரன் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் ஆய்வாளர் ஏசுராஜசேகரனை குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், ஏசு ராஜசேகரனை போலீசார் கைது செய்த நிலையில், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் ஆய்வாளரின் இந்த செயலுக்கு சமுக வலைத்தளங்களில் பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Sathankulam inspector arrested in action rupees 1 and 47 crore in the background what happened