3 டன் ரேசன் துவரம் பருப்பு பறிமுதல்! வண்டியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோட்டம்! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை பகுதியில், ரேஷன் அரிசி மற்றும் பருப்பு கடத்தி வரப்பட்டதை எதிர்த்து, அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் உணவுப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் மும்முரமாக கண்காணித்து வருகிறார்கள்.

புதிய தகவலின் அடிப்படையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே இருந்து வெளியூர் தொடங்கிய ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, குடிமை பொருள் தனி வட்டாட்சியர் அறிவழகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் அதிரடியாக வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.

இந்த தணிக்கையின் போது, சரக்கு வேனில் மூட்டையாக ரேஷன் துவரம் பருப்பு கடத்தி வருவதை கண்டுபிடித்தனர். வாகனத்தில் இருந்த 60 மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள ரேஷன் துவரம் பருப்பை பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

வாகனத்தை இயக்கிய டிரைவர், அதிகாரிகளை பார்த்ததும் குதித்து தப்பி சென்றார். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்படுவதாக தனி வட்டாட்சியர் அறிவழகன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதிலிருந்து, இந்த ரேஷன் பருப்புகள் விருதுநகர் தனியார் மில்லிற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்தது.

கடத்தலுக்கு ஈடுபட்ட நபர்கள் யார் என்பதன் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 tons of ration pulses seized The driver fled after stopping the car


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->