பொங்கல் பண்டிகைக்கு ஆப்பா? மத்திய அரசுக்கு குவியும் கண்டனங்கள்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் சமயத்தில் பட்டயக் கணக்காளர் தேர்வை மத்திய அரசு வைத்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவிக்கையில், "பொங்கல் பண்டிகை நாள்களில் பட்டயக் கணக்காளர் தேர்வு அறிவித்திருப்பது குறித்து, தேர்வு எழுதவிருப்போரின் பெற்றோர் கவலை தெரிவித்து வருகின்றனர். ஜனவரி 14 முதல் 16 ஆம் தேதி வரையில் பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், 14 மற்றும் 16 ஆகிய இரு தேதிகளில் பட்டயக் கணக்காளர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பது, தமிழகத் தேர்வர்களை இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கியுள்ளது.

நாட்டின் பிற மாநிலங்களில் கொண்டாடப்படும் ஹோலி, துர்கா பூஜை போன்று பொங்கல் பண்டிகைகள் தமிழக மக்களின் உணர்வுகளை உள்ளடக்கியது" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவிக்கையில், "பொங்கல் பண்டிகையின் போது (CA) தேர்வுகள் நடைபெறுவது தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் – தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக தேர்வுக்கான அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் தனிப்பெரும் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்வுகள் நடைபெறுவது, கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் கருதுகின்றனர்.

எனவே, தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக, தேர்வர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai MP AMMK TTV Condemn for CA exam in Pongal Holydays


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->