ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்.! - Seithipunal
Seithipunal


எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவையடுத்து அத்தொகுதி கலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இதனையொட்டி இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து தற்போது இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 46 பேர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தற்போது தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த மணீஷை மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அவருக்கு பதிலாக ஸ்ரீகாந்த் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஓசூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode west constituency election officer change


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->