மின்சார வாகனம் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. அரசின் அதிரடி அறிவிப்பு.!
Every 25 km one charging point
காற்று மாசுபாடு மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மின் வாகனங்களை தயாரிக்கின்ற விற்பனையகங்கள், நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழகம் முழுவதிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. இருப்பினும், போதுமான அளவு சார்ஜிங் மையங்கள் இருப்பதில்லை. இதன் காரணமாக இந்த வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அரசு இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் இருக்கும் நெடுஞ்சாலைகளில் 25 கிலோ மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையத்தை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. அத்துடன் தியேட்டர்கள், மால்கள் போன்ற இடங்களிலும் சார்ஜிங் மையங்கள் அமைக்க அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி, "மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டுவருகிறது. மின்சார வாகனங்கள் வாங்க வங்கி கடன்கள் கொடுக்கப்படுகின்றன. தற்போது, அந்த வகையில், சார்ஜிங் மையங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த சமயங்களில் ஒரு யூனிட்டுக்கு 15 ரூபாய் என்ற கணக்கில் விற்பனை நடைபெறும்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Every 25 km one charging point