தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் - பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தாதர் நகரில் இருந்து குஜராத் மாநிலத்தின் போர் பந்தர் நகருக்கு சவுராஷ்டிரா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று வழக்கம் போல் தாதர் நகரில் இருந்து இன்று மாலை 3.30 மணியளவில் குஜராத்தின் கிம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் சவுராஷ்டிரா எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. இந்தச் சம்பவத்தால் ரெயிலில் உள்ள பயணிகள் கத்திக் கூச்சலிட்டனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அதன் படி அவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல், லூப் லைனில் பிற ரெயில்கள் இயக்கப்படுவதால் அந்தப் பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

express train derailed in gujarat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->