வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை கவனித்துக்கொள்வது நமது கடமை - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த காசி தமிழ் சங்கமம் கண்காட்சியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பார்வையிட்டார்.

அதன் பின்னர் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது: " தெற்காசிய பிராந்திய ரீதியாக இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

இந்த உலகம் இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாகப் பார்க்கும் ஒரு சகாப்தம் இருந்தது. ஆனால், இன்று யாரும் அதைச் செய்வதில்லை. இந்த பிராந்தியத்தில் முதன்மை சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. தற்போது சார்க் அமைப்பும் செயல்படவில்லை. 

ஏனென்றால், அதன் உறுப்பு நாடுகளில் ஒன்று அண்டை நாடுகளை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் கையாளலாம் என்று நம்பிக்கை வைத்துள்ளது. இதில், தெளிவான நிலைப்பாட்டை எடுக்காத சில நாடுகளும் உள்ளன.

அவர்களின் பிரச்சினையில் ஒரு முடிவை எடுக்கும்படி நாங்கள் கேட்கிறோம். நாம் ஒரு சுதந்திர சக்தியாக இருந்தால் தான் இந்தியாவை உலகம் மதிக்கும். 

இன்று உலகமே இந்தியாவின் எழுச்சியை  உற்று நோக்கும் போது, அதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பும் வெற்றிகளும் ஒரு பகுதியாக உள்ளது.

ஆகவே, நமக்கும் ஒரு பொறுப்புள்ளது. என்னவென்றால், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை கவனித்துக் கொள்வது நம்மளுடைய கடமை" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

External Affairs Minister Jaishankar speach in banaras hindu university


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->