வேட்டியில் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு - விவசாயிகள் சார்பில் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜி.டி. மாலில் படம் பார்ப்பதற்காக பாகீரப்பா என்ற விவசாயி வெட்டி அணிந்து சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் வெட்டி அணிந்திருந்ததால் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. 

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து வயதில் மூத்த விவசாயி வேட்டி அணிந்து வந்த காரணத்தால் அனுமதி அளிக்காத வணிக வளாக நிர்வாகத்திற்கு எதிர்ப்பு வலுத்ததுடன் விவசாயிகள் மற்றும் கன்னட ஆதரவு அமைப்புகள் வணிக வளாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

அந்த அறிவிப்பின் படி, இன்று சில விவசாயிகள் மற்றும் கன்னட ஆதரவு அமைப்பினர், ஜி.டி. வணிக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வணிக வளாக நிர்வாகம் தரப்பில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farmers protest against farmer not allowed mall for wear vetti issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->