விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் 144 தடை அமல்... பலத்த பாதுகாப்பில் போலீசார்! - Seithipunal
Seithipunal


பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதத்திற்கான சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை டெல்லி நோக்கி அணிவகுத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். 

உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்ல உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மூன்று மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழையும் எல்லைகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 2020 ஆம் ஆண்டு போராட்டம் போல ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் டெல்லி முழுவதும் இன்று முதல் மார்ச் 12ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து காவல் ஆணையர் உத்தரவிட்டார். 

மேலும் டெல்லி எல்லைக்குள் போராட்டம், பேரணி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் லாரிகள், டாக்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmers protest Delhi 144 Prohibition


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->