கோவிட் தடுப்பூசியால் இறந்த மகள்! ஆதாரத்துடன் ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கேட்கும் தந்தை.! - Seithipunal
Seithipunal


கோவிட் தடுப்பூசியால் இறந்த மகளுக்கு ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டு தந்தை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை டில்லியை சேர்ந்த திலீப் லூனாவால் என்பவர் தாக்கல் செய்துள்ளார். இவர் மகள் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த 2021 ஜனவரியில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுள்ளார். இதன் காரணமாக தலைவலி மற்றும் வாந்தி மயக்கம் இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அவர் மார்ச் 1ல் இறந்தார்.

மத்திய அரசின் நோய் எதிர்ப்பு சக்தி கமிட்டி கோவிஷீல்டு போட்டதன் பக்கவிளைவால் இவரது மகள் இறந்ததாக சான்று வழங்கியது. இந்த சான்றிதழை அவரது தந்தை கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார். தனது மகள் மரணத்திற்கு இந்த கோவிட் தடுப்பூசியே காரணம் என்றும், இவரது இழப்புக்கு தனக்கு ஆயிரம் கோடியை தர வேண்டும் என்று கோவிஷீல்டு மருந்து தயாரித்த சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை ஏற்று கொண்ட கோர்ட் விசாரணையை வரும் நவ.17 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு மற்றும் சீரம் இன்ஸ்டியூட் எய்ம்ஸ் இயக்குனர், மருத்துவ அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father fights court for compensation daughter's death


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->