ம.பி - பிறந்த குழந்தையை புதரில் வீசிய தந்தை - காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன போலீசார்.
father throw born baby in madhya pradesh
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில், கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வருபவர் ரோஹித் யாதவ். இவர் கடந்த வியாழக்கிழமை அன்று, 20 நாட்களுக்கு முன்பு பிறந்த தனது பெண் குழந்தையை, இந்தூர்-உஜ்ஜைன் சாலையில் உள்ள புதர் ஒன்றில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
இதற்கிடையே வீட்டில் குழந்தையைக் காணவில்லை என்பதை அறிந்து திகைத்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் படி போலீசார் ரோஹித் யாதவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், தனக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், இந்தமுறை ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பியதாகவும், ஆனால், பெண் குழந்தை பிறந்ததால், அதனை புதரில் வீசியதாகவும் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், விரைந்துச் சென்று அந்த குழந்தையை மீட்டு, அதன் அன்னையிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஹிரா நகர காவல் நிலைய அதிகாரி பி.எல்.ஷர்மா கூறுகையில், குற்ற செயலில் ஈடுபட்ட குழந்தையின் தந்தை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவகிறது. ஆயினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. பிறந்து 20 நாட்களே ஆன, பச்சிளம் குழந்தைக்கு நடந்த இந்த அக்கிரமத்தை அந்தப் பகுதியினர் வன்மையாக கண்டித்தனர்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
father throw born baby in madhya pradesh