நிதி நெருக்கடி! திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்! கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை திவால் பிரச்னையின் காரணமாக சிறப்பு அதிகாரத்தின் மூலம் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் தனது விமான சேவையை நிறுத்திய நிலையில், மீண்டும் நிறுவனம் செயல்படுவதற்காக ஜலான் கல்ராக் கூட்டமைப்பு (ஜேகேசி) நிறுவனம் அதனை வாங்கியது. 

ஜேகேசி, தன்னுடைய முதல்நிலையான பங்குகளை முழுமையாக செலுத்தாமல் இருந்ததால், ஜெட் ஏர்வேஸின் கடன்களை வழங்கிய வங்கிகள் – கனரா வங்கி, எஸ்பிஐ, பிஎன்பி உள்ளிட்டவை – இந்தக் கொள்முதலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வங்கிகள், கொள்முதல் மற்றும் மீட்டெடுக்கும் நடைமுறைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டின.

தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் குழு, 142 சட்டப்பிரிவு மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைப்பதற்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு, கடன் வழங்கியவர்களும், தொழிலாளர்களும், பங்குதாரர்களும் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களது நலன்களை பாதுகாக்கும் விதமாக வங்கிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் எனக்கூறப்பட்டது. மேலும், கடன்களை அடைப்பதற்கான நடவடிக்கைகளை என்சிஎல்ஏடி உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி மற்றும் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Financial crisis Bankrupt Jet Airways Supreme Court ordered to dissolve


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->