கால்பந்து மைதானத்தில் திடீர் தீ விபத்து - பார்வையாளர்களின் கதி என்ன?
fire accident at foot ball ground in kerala
கேரள மாநிலத்தில் உள்ள அரிகோடு அருகே கால்பந்து மைதானத்தில் பட்டாசு வெடித்ததில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு அருகே உள்ள தேரட்டம்மலில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டன. அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியதால் போட்டிக்காக காத்திருந்த பார்வையாளர்கள் பயத்தில் ஓட்டம் பிடித்தனர்.
இந்த விபத்தில், அரங்கில் இருந்த பலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது:- “கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரிக்கோடு அருகே பட்டாசுகள் பற்ற வைக்கப்பட்டதால் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பட்டாசுகள் வெடித்து பார்வையாளர்கள் இருக்கும் பகுதிக்கு பரவியுள்ளன. காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றுத் தெரிவித்துள்ளனர்.
English Summary
fire accident at foot ball ground in kerala