உணவகத்தில் திடீர் தீ விபத்து - சாப்பிட வந்தவர்களின் நிலை என்ன?
fire accident in hotel at delhi
தலைநகர் டெல்லியில் உள்ள ரஜோரி கார்டன் பகுதியில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் வழக்கம்போல் இன்று செயல்பட்டு வந்த நிலையில், திடீரென தீப்பற்றியது. இதனால் அங்கு உணவு சாப்பிட சென்றவர்கள் தீ விபத்தில் சிக்கினர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் அங்கு சிக்கியிருந்த மக்கள் உணவகத்தின் மாடியில் இருந்து அடுத்த கட்டிடத்தின் மாடிக்கு குத்தித்து உயிர் தப்பினர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
fire accident in hotel at delhi