அமேசானை முந்திய ப்ளிப்கார்ட் - மும்பையில் பறக்கவிட்ட 2000 நோட்டுகள்.! - Seithipunal
Seithipunal


அமேசானை முந்திய ப்ளிப்கார்ட் - மும்பையில் பறக்கவிட்ட 2000 நோட்டுகள்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கேட்வே பகுதியில் நேற்று வேன் ஒன்றிலிருந்து 2000 ரூபாய் கரன்சி நோட்டுகள் சிதறிய சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஃபார்ஸி வெப்தொடரில் போலீஸிடமிருந்து தப்பிக்க நெடுஞ்சாலையில் கரன்சி நோட்டுகளை பறக்க விடும் காட்சி பிரபலமானது. இந்த காட்சியைப் பார்த்துவிட்டு, இன்ஸ்டா பிரபலங்கள் சிலர் விளம்பர மோகத்தில் நெடுஞ்சாலையில் கரன்சி நோட்டுகளை நெடுஞ்சாலையில் பறக்க விட்டு போலீஸ் பிடியில் சிக்கினார்கள்.

அந்த வரிசையில் ப்ளிப்கார்ட் நிறுவனமும் சேர்ந்துள்ளது. அந்த நிறுவனத்தின் ’பிக் பில்லியன் டே’ விற்பனை இன்று தொடங்க உள்ளது. இதே நாளில் அமேசானின் ’கிரேட் இந்தியன் பெஸ்டிவல்’ விற்பனையும் தொடங்குகிறது. இதற்கான விளம்பரங்களில் இரு நிறுவனங்கள் மத்தியிலும் பெரும் போட்டி உருவானது.

இந்த நிலையில், மும்பை கேட்வே சாலையில் வாவ் என்ற விளம்பர வாசகம் எழுதிய ப்ளிப்கார்ட் வேன் ஒன்றிலிருந்து 2000 ரூபாய் கரன்சிகள் சிதறிப் பறக்கும் வீடியோ இணையத்தில் பரவி அனைவர் கவனத்தையும் கவர்ந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flipkart company money shower in mumbai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->