காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பலத்த பாதுகாப்பு; மலைப்பாதையில் தீவிர சோதனை..!
Following the Kashmir terrorist attack intensive checks on the mountain pass of Tirupati tirumala Temple
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிரொலியாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலையிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருமலைக்கு வரும் ஆர்டிசி பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் அலிபிரி சோதனைச்சாவடியில் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இதுதவிர மலைப்பாதைகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஏழுமலையான் கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Following the Kashmir terrorist attack intensive checks on the mountain pass of Tirupati tirumala Temple