சொந்த மண்ணில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஆர்.சி.பி: மீண்டும் டெத் ஓவேரில் சொதப்பிய ராஜஸ்தான்..! - Seithipunal
Seithipunal


ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்  42-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி சார்பில் முதலாவதாக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் சால்ட் ஆகியோர் களமிறங்கினர்.

இதில், சால்ட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய விராட் கோலி தனது அரைசதத்தை பதிவு செய்து தொடர்ந்து 42 பந்துகளில் 70 ரன்களில் கேட்ச் ஆனார்.  படிக்கல் 27 பந்துகளில் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து படிதார் 1 ரன்னில் கேட்ச் ஆனார்.

முடிவில் ஜிதேஷ் சர்மா 20 ரன்களும், டிம் டேவிட் 23 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 05 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. 

ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா 02 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஹசரங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அதன்படி முதலில் ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூரியவன்சி  களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். வைபவ் சூரியவன்சி 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா 28 ரன்களிலும்,  கேப்டன் ரியான் பராக் 22 ரன்களிலும், துருவ் ஜுரேல் 47 ரன்களிலும், சிம்ரன் ஹெட்மயர் 11 ரன்களிலும், சுபம் தூபே 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 09 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RCB ends its losing streak at home Rajasthan again lost in the final death over


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->