பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்..?
Former Bihar Chief Minister Lalu Prasad Yadav is in critical condition
பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் (76), பாட்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருதய நோயாளியான லாலு பிரசாத்துக்கு, கடந்தாண்டு மும்பை மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அத்துடன், கடந்த 2022-ஆம் ஆண்டு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அத்துடன், அவருக்கு வேறு சில உடல் உபாதைகளும் உள்ளன. இந்நிலையில், அவரது உடல் நலம் மிகவும் மோசமானதை தொடர்ந்து, இன்று அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
லாலு பிரசாத்துக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவை ஏற்ற இறக்கத்துடன் உள்ளதாங்கவும், எனினும் கவலைப்பட எதுவும் இல்லை என்று கட்சி தலைவர்களில் ஒருவரான பாய் விரேந்திரா தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை இன்று இரவுக்குள் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Former Bihar Chief Minister Lalu Prasad Yadav is in critical condition