தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை - உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


வருகின்ற ஏழாம் தேதி தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இதற்கான யாக சாலை பூஜை இன்று தொடங்கியது. இதற்கிடையே  கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கக்கோரி தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. கோவில் பகுதியில் நூறு டிராக்டருக்கும் அதிகமாக மண் அள்ளப்பட்டது. இதனால் கோவில் கட்டிடம் உறுதியிழந்துள்ளது. இதனையடுத்து கோவில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதி முறையாக செலவிடப்படவில்லை. ராஜகோபுரத்தில் பழுது சரி செய்யப்படாமலேயே வண்ணம் பூசும் பணி நிறைவடைந்துள்ளது.

ஆகவே, கோவிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடியும் வரை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தடை விதித்தும், கோவில் புனரமைப்பு பணிகளின் தற்போதுள்ள நிலை குறித்து ஆய்வு செய்ய ஆணையரை நியமித்தும், கோவில் புனரமைப்பு பணிக்கு அரசு வழங்கிய நிதியில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில், திருப்பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விட்டது என்றுத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த மனுவுக்கு அறநிலைய துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தப்போது, மனுதாரரின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், கோவில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து, கோவிலின் பணிகள் பற்றி ஐ.ஐ.டி. குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thenkasi kasi vishwanathar temple kumbabhisekam ban chennai hc order


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->