டெஸ்ட் முதல் கிங்ஸ்டன் வரை; ஏப்ரல் 4: ஓடிடியில் ரிலீஸ் ஆகும் புதிய திரைப்படங்கள்
From Test to Kingston April 4 New movies releasing on OTT
கொரோனாவுக்கு முன்புவரை புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பிறகு பல மாதங்கள் கழித்து டிவியில் ஒளிபரப்பாகும். ஆனால், ஓடிடி தளங்களின் வளர்ச்சி காரணமாக, தற்போது திரையரங்கில் படம் பார்க்க தவறினாலும் ஒரு மாதத்திற்குள் ஓடிடியில் வெளியாகும் என்பதால், மக்கள் உடனடியாக பார்க்கும் மனநிலைக்கு மாறிவிட்டனர். இதனால், ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில், வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி Netflix, Zee5, Tentkotta உள்ளிட்ட ஓடிடி தளங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
டெஸ்ட் (Netflix)
நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சசிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தின் மூலம் பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
கிங்ஸ்டன் (Zee5)
ஜிவி பிரகாஷ், திவ்ய பாரதி ஆகியோர் நடித்துள்ள கிங்ஸ்டன் திரைப்படம், வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி Zee5 தளத்தில் வெளியாக உள்ளது. கமல் பிரகாஷ் இயக்கிய இப்படத்தை, ஜிவி பிரகாஷ் தான் தயாரித்துள்ளார். இந்த படத்தில் 3,000-க்கும் அதிகமான VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
லெக் பீஸ் (Tentkotta)
மணிகண்டன், கருணாகரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ள லெக் பீஸ் திரைப்படம், முழுக்க முழுக்க நகைச்சுவை கதைக்களம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநாத் இயக்கிய இப்படம், தியேட்டரில் பெரிய வரவேற்பு பெறாத நிலையில், ஓடிடியில் வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி Tentkotta தளத்தில் வெளியாக உள்ளது.
ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படங்கள், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுமா என்பது எதிர்பார்ப்புக்குரியது.
English Summary
From Test to Kingston April 4 New movies releasing on OTT