பள்ளி மாணவர்கள் மீது லாரி கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி.!
four school students died for lory accident in kerala
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் பனையன்படம் என்ற பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளி முடிந்து சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தனர். மேலும் சிலர் அருகில் இருந்த பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக சிமெண்டு ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற மாணவ, மாணவிகள் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரிக்கு அடியில் சிக்கி 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சில மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்தவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
four school students died for lory accident in kerala