இளம்பெண்ணை நிர்வாணமாக இழுத்துச் சென்ற பெண்கள் - ஹோலி பண்டிகையில் நடந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள, இந்தூர் மாவட்டம் கவுதம்புரா அருகே சச்சோடா கிராமத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது 30 வயதுப் பெண் ஒருவர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு, நான்கு பெண்களால் அடித்து உதைக்கப்பட்டார்.

பின்னர், அவர்கள் பெண்ணின் ஆடைகளை கழற்றி, நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதையடுத்து இன்று சச்சோடா கிராமத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுனில் மேத்தா சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தால் தனது தாய் வீட்டுக்குச் சென்றது தெரிய வந்தது. 

மேலும் அவர் அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்தியதில், நான்கு பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்துச் சென்று அவரது ஆடைகளை களைத்ததாகவும், அந்த பெண் கெஞ்சியும், அவர்கள் அவளை அடித்து உதைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, இளம்பெண்ணை நிர்வாணமாக்கி, உதைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற 4 பெண்களை இன்று கைது செய்தனர். இந்தூரில் இளம்பெண்ணை நிர்வாணம் செய்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four womens arrested for attack woman in madhya pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->