அமெரிக்க மக்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம்.. நாடாளுமன்றத்தில் டிரம்ப் உரை!
We are working to make the American peoples dream come true. Trumps speech to Congress!
அமெரிக்க ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்றவுடன் அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என்று டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகளிடன் கடும் அமளிக்கிடையே ஜனாதிபதி டிரம்ப் பேசியதாவது:-
அமெரிக்க ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்றவுடன் அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என்றும் அமெரிக்கர்களின் கனவை நினைவாக்க உழைத்து வருகிறோம் என கூறினார்.மேலும் கடந்த 6 வாரங்களில், நான் கிட்டத்தட்ட 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளேன் என்றும் 400க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் ,நான் பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள், அமெரிக்காவின் தெற்கு எல்லையில் அவசரநிலையை பிரகடப்படுத்தினேன் என்றும் நமது நாட்டின் மீதான படையெடுப்பைத் தடுக்க அமெரிக்க ராணுவத்தையும் எல்லைப் படையையும் நான் நிறுத்தினேன் என தெரிவித்தார்.
மேலும் இதன் விளைவாக, கடந்த மாதம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான முந்தைய ஆட்சிக்காலத்தில், ஒரு மாதத்தில் லட்சக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்திருந்தனர் என்றும் பெரும்பாலான நிர்வாகங்கள் 4 அல்லது 8 ஆண்டுகளில் நிறைவேற்றியதை விட 43 நாட்களில் நாம் அதிகமாகச் சாதனை செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
English Summary
We are working to make the American peoples dream come true. Trumps speech to Congress!