ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு இலவசம் மின்சாரம்.. முதலமைச்சர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் துணை பிரதமர் பாபுஜெகஜீவன்ராம்  பிறந்தநாளையொட்டி அவரது பெயரில் விருது வழங்கும் விழா பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். 

அதன்பிறகு அவர் பேசியதாவது, கர்நாடகாவில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமூக மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்ள அரசு மானியமாக ஒருவருக்கு ரூ. 1.75 லட்சம் வழங்குகிறது. இந்த மானியம் 2 லட்சமாக உயர்த்தப்படும். ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு உதவி செய்ய வசதியாக ஒவ்வொரு தாலுகாவிலும் பாபுஜெகஜீவன்ராம் சுயதொழில் திட்டம் அமுல்படுத்தப்படும். இந்த திட்டத்தை வடிவமைத்து ஒரு மாதத்தில் செயல்படுத்தப்படும். 

குடீர திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு 75 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஒரு வாரத்தில் இதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும். அரசு விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். புதிதாக தொழில் தொடங்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ. 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். 

பாபுஜெகஜீவன்ராம் விசுவாசம், நேர்மையின் சின்னமாக விளங்கினார். கிராமப்புறங்களில் நில உரிமை உள்ளவர்களுக்கு சமூக மரியாதை கிடைக்கிறது. ஆதிதிராவிடர், பழங்குடியின சமுதாயத்தினரின் நலனுக்காக நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் அமுல்படுத்தப்படும் நிலவுரிமை திட்டத்தில் ஆதி திராவிட,ர் பழங்குடியினருக்கு இதுவரை 5 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த மானியம் 20 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Free Electricity for SC And ST People in Karnataka


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->