பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி; தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும்; முகேஷ் அம்பானி..!
Free treatment will be provided to those injured in the attack Mukesh Ambani
ஜம்மு- காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது குறித்து முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் இறந்ததற்கு நாடே துக்கத்தில் இருக்கிறது. துக்கத்தில் நானும் இணைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டும் எனவும், மும்பையில் உள்ள தங்கள் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் காயமடைந்த அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி. இதை யாரும் எந்த வகையிலும் ஆதரிக்கக்கூடாதுஎனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான போரில், பிரதமர் மோடி, மத்திய அரசு மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நாங்கள் ஆதரவாக இருப்போம் என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary
Free treatment will be provided to those injured in the attack Mukesh Ambani