12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி-மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு தடுப்பு நடவடிக்கையாக தடுப்புசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் பாதிப்பின் வீரியம் குறைவதற்கு தடுப்பூசியே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு நாளை முதல் தடுப்புசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல் 60வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்புசி போட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

From tomorrow 12 to 14 year old child covid Vaccinne


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->