இஸ்லாமிய சிறுமிகளை தாக்கிய மர்மக்கும்பல் - உ.பியில் பயங்கரம்..! - Seithipunal
Seithipunal


இந்து மதத்தை சேர்ந்த ஆண் ஒருவருடன் பேசியதாக கூறி, இஸ்லாமிய சிறுமிகள் இருவரை மர்ம கும்பல் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர் மாவட்டம் தியோபந்த் என்ற பகுதியில், இரண்டு இஸ்லாமிய சிறுமிகள், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவரிடம் வழி கேட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் இந்து ஆண் நண்பரிடம் பேசியதாக கூறி இருவரையும் கடுமையாக தாக்கி, அவர்கள் அணிந்திருந்த ஹிஜாபையும் கழட்ட வலியுறுத்தியுள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று கூடி மர்ம கும்பலிடம் சிறுமிகளை தாக்கியது குறித்து கேட்டதில், சிறுமிகள் இந்து ஆன் நண்பரிடம் பேசியதாகவும், அந்த இளைஞரிடம் பரிசு கொடுத்ததாகவும் மர்ம கும்பல் குற்றம் சாட்டியது.

அங்கிருந்து தப்பிய சிறுமிகள் உள்ளூர் போலீசில் புகார் அளித்தனர். மேலும், மர்ம கும்பல் தங்களை அடித்து ஹிஜாபை கழற்ற முயன்றதாக" வாக்குமூலம் அளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், முகமது மெஹ்தாப் என்ற நபரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-------------------------------


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gang attack to muslim girls in uttar pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->