சிறுமி தொண்டையில் சிக்கிய நூடுல்ஸ்.. கதறி அழுவும் பெற்றோர் - கேரளாவில் சோகம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியை சேர்ந்தவர்கள் சோஜன்-ஜினா தம்பதியினர். இவர்களுக்கு ஜோவானா என்ற எட்டு வயது மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், ஜோவானா நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டில் 'நூடுல்ஸ்' உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது நூடுல்ஸ் தொண்டையில் சிக்கிக்கொண்டதில் அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 

சிறிது நேரத்திலேயே ஜோவானா மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஜுவானாவை மீட்டு சிகிச்சைக்காக அடிமாலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக இடுக்கி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஜோவானா அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நூடுல்ஸ் தொண்டையில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl died in kerala for eat noodles


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->