கூகுளின் அடுத்த பெரிய சர்ச்சை விவகாரம்.. பூதாகிரகமாக வெடிக்கும் பிரச்சனை..!!
google create border problem about jammu Kashmir India Pakistan
நாம் பிரதானமாக உபயோகம் செய்யும் கூகுள் இணையதளமானது சில நேரங்களில் சர்ச்சையான விஷயங்களில் சிக்கிக்கொண்டு இருப்பது வழக்கமான ஒன்றாகவுள்ளது. மேலும், கூகுள் மேப்ஸ் பயன்படுத்தி பலர் புண்ணாகிப்போன சுவாரசிய கதைகளும் வளம் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், காஷ்மீர் புகைப்படத்தை சர்ச்சைக்குரிய விதத்தில் கூகுள் காட்டியுள்ளது.
இந்த காஷ்மீர் பகுதியானது, இந்திய நாட்டில் இருந்து பார்க்கும் நேரத்தில் இந்தியாவின் எல்லைக்குள் காஷ்மீர் இருப்பது போல காட்டியுள்ளது. இதே நேரத்தில் இந்தியாவிற்கு வெளியே சென்று காஷ்மீர் வரைபடத்தினை பார்க்கும் போது, பிரச்னைக்குரிய பகுதியை சித்தரித்து எல்லைப்புள்ளிகளை வெளியிட்டுள்ளது.
பாக்கிஸ்தான் நாட்டில் இருந்து பார்க்கும் நேரத்தில் கூட எல்லைகளை பிரச்னைக்குரிய இடமாக காட்டும் விதமாகவும், இந்தியாவில் இருந்து பார்க்கும் போது இந்தியாவின் கட்டுப்பாட்டில் காஷ்மீர் இருப்பது போலவும் காட்டியுள்ளது. எந்த நாட்டில் இருந்து நாம் பார்க்கிறோம் என்பதை பொறுத்து இது மாறுபட்டுள்ளது.

இது தொடர்பான செய்தியை அமெரிக்கா நாட்டில் உள்ள பிரதான பத்திரிகையான வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், இந்த விஷயம் தோற்பாக பதிலளித்த கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூகுள் நிலையான மற்றும் உலகளாவிய கொள்கையை கொண்டுள்ளது. இதன் மூலமாக சர்ச்சைக்குரிய பகுதியில் உரிமை கோரல்களை வரைபடம் தெரிவித்துள்ளது.
எந்தத்தரப்பு நிலைப்பாட்டை அங்கீகாரம் செய்வது மற்றும் உறுதிசெய்தல் தொடர்பான விஷயமாக இல்லாமல், உள்ளூர் மொழிகள் மற்றும் உள்ளூர் சட்டத்திற்கு ஏற்றாற்போல எடுத்துக்காட்டுகிறது. கூகுள் இணையத்தை பயன்படுத்தும் நபர்களுக்கு மிகசிறந்த மற்றும் புதுமையான, துல்லியமான வரைபடத்தை தயாரித்து அளிப்பதில் உறுதியாக இருக்கிறோம். புவிசார் அரசியல் நிலைகளை பொருத்தும், எங்களின் வழங்குநர்கள் தரவுகள் பொறுத்து எல்லைகள் புதுப்பிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
google create border problem about jammu Kashmir India Pakistan