இனி அரசு ஊழியர்களுக்கு ஆப்பு !! அரசு அலுவலகங்கள் கண்காணிப்பு காட்சிகளை மறுக்க முடியாது !!
Government office can not refuse to give cctv footage
அரசு அலுவலகங்களின் கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பெறுவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ளது, ஆகையால் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வரை எந்தத் துறையும் விண்ணப்பதாரருக்கு அதை மறுக்க முடியாது என்று உத்தரகாண்ட் மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநில தகவல் ஆணையம் ஒரு வழக்கில் தனது உத்தரவை வழங்கும்போது, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வழங்காததற்காக ஹரித்வார் மாவட்ட வழங்கல் அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரிக்கு பட் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநில ரூர்க்கியில் வசிக்கும் சாமானியர் ஒருவர், கடந்த மே மாதம் 25 ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ஹரித்வார் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் (CCTV) பதிவைக் கோரினார். ஆனால் அங்கிருந்த பொதுத் தகவல் அதிகாரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8(1)(ஜி) பிரிவை மேற்கோள் காட்டி அவர் கேட்ட கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை தர மறுத்தார் அந்த அரசு அதிகாரி. எங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என தெரிவித்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு (8)ஐ மேற்கோள் காட்டி, தகவல்களை வழங்க மறுக்கும் முன், கோரப்பட்ட வீடியோ காட்சிகள் தனித்தனியாகப் பாதுகாக்கப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் காட்சிகளைப் பாதுகாக்காமல் விண்ணப்பதாரரிடம் ஒப்படைக்க மறுப்பது எந்த நியாயமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள் டிஜிட்டல் வடிவத்தில் அணுகக்கூடிய ஒரு மின்னணு பதிவாகும், மேலும் இது அரசின் இறையாண்மை, பாதுகாப்பு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் வரை கோரிக்கையின் பேரில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மறுக்க முடியாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வழங்காத ஹரித்வார் மாவட்ட பொது தகவல் அதிகாரிக்கு மாநில தகவல் ஆணையர் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளார்.
English Summary
Government office can not refuse to give cctv footage