ஆளுநர் மனிதாபிமானத்தோடு நடக்க வேண்டும் - நடிகர் சத்யராஜ் பேட்டி.! - Seithipunal
Seithipunal


ஆளுநர் மனிதாபிமானத்தோடு நடக்க வேண்டும் - நடிகர் சத்யராஜ் பேட்டி.!

நடிகர் சத்யராஜ் கோயம்புத்தூரில் உள்ள வஉசி மைதானத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் பின்னர்  நிருபர்களை சந்தித்த நடிகர் சத்யராஜ் பேசியதாவது:- 

"சென்னை, மதுரையில் புகைப்படம் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அழைத்தார்கள். ஆனால், போக முடியவில்லை. தற்போது கோவையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக கூறி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அழைத்தார்.

அதனால், நேரில் வந்து இந்த கண்காட்சியை பார்த்துள்ளேன். இந்த புகைப்பட கண்காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தது முதல் அனைத்து புகைப்படமும் சான்றிதழ்களோடு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் முதல்வர் ஸ்டாலின், கலைஞர் வேடமிட்டு பிரச்சார நாடகத்தில் நடித்ததும், அதனை எம்ஜிஆர் பாராட்டியுள்ளது தான். இந்த புகைப்பட கண்காட்சியை கோவையில் உள்ள மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். 

நான் அவ்வப்போது நடுத்தர மக்கள் மற்றும் அவர்கள் கீழே இருப்பவர்களுடன் பேசுவேன். அப்போது அவர்கள் திருப்திகரமாக உள்ளது. எந்த ஆட்சி வந்தாலும் நாங்கள் திருப்தியாக தான் உள்ளோம் என்றனர். ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? என்று தெரியவில்லை. 

நல்ல காரியத்திற்கு நல்ல திட்டத்திற்கு ஆதரவாக ஆளுநர் செயல்பட வேண்டும். மக்கள் நலமே முக்கியம் என்பதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மனிதாபிமானத்தோடு ஆளுநர் நடக்க வேண்டும். சூதாட்டத்தின் மூலம் பல உயிரிழப்பு ஏற்படுகிறது. சூதாட்டம் நல்லது அல்ல" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor act with humanity actor sathiyaraj speach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->