புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்..!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கான மாதாந்திர ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறியுள்ளார். கடந்த  சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2022-2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அறிவிப்பு தொடர்பான ஆவணங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசியதாவது "புதுச்சேரி அரசின் எந்த உதவி திட்டங்களையும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்க ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கான கோப்புகளில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கையெழுத்திட்டுள்ளார். புதுச்சேரியில் 21 வயதிற்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் புதுச்சேரி அரசின் எந்த ஒரு மாதாந்திர உதவி தொகையும் பெறாத வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் மாதம் தோறும் தலா ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்."என அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor approves Rs1000 scheme for housewife in Puducherry


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->