மாணவர்கள் தங்கும் விடுதிக்கு ஜி.எஸ்டி.யிலிருந்து விலக்கு - மத்திய அமைச்சர் அறிவிப்பு.!
gst cancelled students hostels union minister nirmala seetharaman infor
நாட்டின் தலைநகர் டெல்லியில் 53-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அப்போது, இந்தக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: "எஃகு, அலுமினியம், இரும்பு உள்ளிட்ட பால் கேன்களுக்கு ஒரே சீரான 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். அட்டை பெட்டிகளுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.
மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு விலக்கு அளிக்கப்படும். மாணவர்கள் 90 நாட்கள் தங்கவேண்டும். மாத வாடகை ரூ.20 ஆயிரத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
ரெயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, பொருட்கள் வைக்கும் அறை, பயணிகள் பயன்படுத்தும் மின்சார வாகனங்களுக்கான சேவை, ரெயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் உள்ளிட்டவற்றிற்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
English Summary
gst cancelled students hostels union minister nirmala seetharaman infor