குஜராத்தில் சிக்கிய 173 கிலோ போதைப்பொருள்கள்! 2 பேர் அதிரடி கைது.!
Gujarat 173 kg drugs seized
குஜராத், அரபிக்கடல் பகுதியில் போதை பொருட்கள் கடத்துவதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக சுற்றி திரிந்த படகை அதிகாரிகள் சுற்றி வளைத்து சோதனை செய்தபோது அதில் 173 கிலோ எடை கொண்ட போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அதனை கடத்தி வந்த இந்திய மீன்பிடி படகில் இருந்த 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக குஜராத்தில் 86 கிலோ போதை பொருட்கள் பிடிபட்ட நிலையில் மீண்டும் 173 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டு மட்டும் குஜராத்தில் இதுவரை ரூ. 3400 கோடிக்கும் மேற்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Gujarat 173 kg drugs seized