குஜராத் சட்டமன்ற தேர்தல் : வாக்களிக்க திருமணத்தை மாற்றி வைத்த மாப்பிள்ளை.!
Gujarat assembly election Groom changed marriage to vote
குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் இன்று மற்றும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
குஜராத்தில் பாஜக தொடர்ந்து ஆட்சி அமைத்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.இந்த முறை நடைபெறும் குஜராத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. குஜராத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் நோக்கில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
அதேபோன்று டெல்லி மற்றும் அண்டை மாநிலமான பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சியும் குஜராத் தேர்தலில் களமிறங்கியுள்ளது.இன்று நடைபெறும் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19 மாவட்டங்களில் அமைந்துள்ள 89 தொகுதிகளுக்கு நடைபெற்றது.
காங்கிரஸ் மற்றும் பாஜக 89 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 88 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. முதல் கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில் 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள், 70 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.
குஜராத் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இடைவேளை இன்றி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க இளைஞர் ஒருவர் தனது திருமணத்தை மாற்றி வைத்துள்ளார். அந்த வகையில் காலையில் நடக்க இருந்த தனது திருமண நிகழ்வை மாலை நேரத்திற்கு மாற்றியுள்ளார். மேலும் மாப்பிள்ளை அலங்காரத்துடன் வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார்.
English Summary
Gujarat assembly election Groom changed marriage to vote