தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி ட்விட்டர் பதிவு.! - Seithipunal
Seithipunal


182 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் சட்ட சபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு  கடந்த 1-ந்தேதி முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டாவது கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றது.

இந்தத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று காலை வாக்களித்துள்ளார். இதையடுத்து, பிரதமர் மோடி தனது டுவீட்டரில் வாக்களிக்க இருக்கும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, "குஜராத் மாநிலத் தேர்தலின் இரண்டாவது கட்டத்தில் வாக்களிக்க இருக்கும் அனைவரையும், அதிலும் குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தொகுதிகளில் உள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gujarat election prime minister modi twitter post all peoples voting in election


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->