செப்டம்பர் 2 முதல் 4 வரை மஞ்சள் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
Gujarat Yellow Alert IMD
குஜராத் மாநிலம் வதோதராவில் செப்டம்பர் 2 முதல் 4 வரை அதிகனமழை (மஞ்சள் எச்சரிக்கை) பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் 23-ம் தேதி பெய்த கனமழை மற்றும் அஜ்வா அணை திறப்பு காரணமாக, வதோதரா நகர் வெள்ளக்காடானது. ஒரு ஆள் மட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் ஆறுபோல் வெள்ளநீர் ஓடியது.
ஆக.27 முதல் 29 வரை குவதோதராவில் பெய்த கணமழை காரணமாக 28 முதலைகள் மீட்கப்பட்டன. இதுவரை கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 28 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், செப்.2ம் தேதி வதோதராவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,
பருச் மற்றும் நர்மதா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய குஜராத்தை ஒட்டிய சவுராஷ்டிராவில் அகமதாபாத் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செப்.4ம் தேதி : தெற்கு குஜராத் மற்றும் மத்திய குஜராத் பகுதி, ஆனந்த் மற்றும் பருச் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.