குகேஷ்-க்கு ரூ.5 கோடி,  மாரியப்பனுக்கு பரிசு வழங்கவில்லை என்று பரப்பப்படும் வதந்தி! - Seithipunal
Seithipunal


உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்-க்கு தமிழ்நாடு முதல்வர் ரூ.5 கோடி பரிசுத் தொகை அறிவித்தார்.

இந்நிலையில், குகேஷ்-க்கு 5 கோடி ரூபாய் அறிவித்த அரசு தடகள வீரர் மாரியப்பனுக்கு வெறும் வாழ்த்து மட்டும் கூறிவிட்டு பரிசுத் தொகை வழங்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதாக தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அதன் அறிக்கையில், கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற 'ரியோ பாரா ஒலிம்பிக்' தொடரில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.

அடுத்ததாக, 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற போது தமிழ்நாடு முதல்வர் ரூ.2 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார். 

மேலும், குரூப்- 1 பிரிவில் மாரியப்பனுக்கு தமிழ்நாடு காகித நிறுவனத்தின் துணை மேலாளர் பணி வழங்கப்பட்டது.

2024ம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற போது தமிழ்நாடு முதல்வர் ரூ.75 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்தார்.

மேலும் 2024ம் செப்டம்பர் மாதம் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக ரூ.1 கோடி பரிசுத் தொகை தமிழ்நாடு முதல்வர் வழங்கினார். 

தடகள வீரர் மாரியப்பன் அவர்களுக்கு பரிசுத் தொகை, போட்டிகளில் பங்கேற்றல், மருத்துவ செலவுகள் என சுமார் ரூ7.5 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசால் உதவிகள் செய்யப்பட்டுள்ளது என்று SDAT தெரிவித்துள்ளது. 

ஆனால், தடகள வீரர் மாரியப்பனுக்கு முதல்வர் வாழ்த்து மட்டுமே கூறியதாக இனரீதியான வதந்திகள் பரப்பப்படுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தரப்பில், 07.05.2021 முதல் 30.11.2024 வரை சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகள் உள்ளிட்ட 3,345 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.104.22 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் 585 விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும், உயர்நிலைப் போட்டிகளில் பங்கேற்றல் மற்றும் மருத்துவச் செலவு உட்பட பல்வேறு செலவினங்களுக்கும் ரூ. 13.33 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gukesh Mariyappan TNgovt issue Fact check


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->