பொதுமக்களே உஷார்.. ஆட்டத்தை தொடங்கிய இன்ஃப்ளூயன்சா வைரஸ்.. இந்திய அளவில் 2 பேர் பலி.!
H3N2 Influenza virus fever 2 peoples death
தமிழகத்தில் சமீப காலமாக பருவநிலை மாற்றங்களால் புதிய வகை வைரஸ் நோய்கள் பரவி வருகின்றன. அதன் காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் முதியவர்கள் என இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பாதித்து வருகிறது.
சாதாரண சளி இருமல் காய்ச்சலால் மாத்திரை மருந்து எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். ஆனால் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்படுவோர் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த காய்ச்சலுக்கு காரணம் H32 வைரஸ் தான் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த வகை காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்களிடம் கேட்ட போது, வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கூளிர்காலம் முடியும் வரையில் குளிச்சியான காய் மற்றும் பழங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த வகை பாதிப்புகள் தீவிரமடையாமல் ஒரு வாரத்திற்குள் குணமாகிவிடும் என பொது சுகாதாரத்துறை மருத்துவ இயக்குனர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்திய அளவில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பிற்கு இந்தியாவில் இருவர் உயிரிழந்தத சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஹரியானா மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
English Summary
H3N2 Influenza virus fever 2 peoples death