வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.. தொடரும் உயிரிழப்புகள்.. மேலும் ஒருவர் பலி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் H3N2 வைரஸ் காய்ச்சலால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாடு முழுவதும் சமீப காலமாக பருவநிலை மாற்றங்களால் புதிய வகை வைரஸ் நோய்கள் பரவி வருகின்றன. அந்த வகையில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல்காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக சிறுவர்கள் முதியவர்கள் என இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பாதித்து வருகிறது. இந்த வகை காய்ச்சலுக்கு காரணம் H3N2 வைரஸ் தான் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த வகை வைரஸ் காய்ச்சல் மூலம் உயிரிழப்புகள் ஏற்படாது என தெரிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் தற்போது அடுத்தடுத்த உயிரிழப்பு சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் H3N2 வைரஸ் காய்ச்சலுக்கு 73 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி, உயிரிழந்த முதியவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் இதயத்தில் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H3N2 virus affected old man death in Maharashtra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->