ஹரியானா கலவரம்.. இணையதள சேவை நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


அரியானா மாநிலத்தில் உள்ள நுஹ் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை இந்து அமைப்பினர் ஊர்வலம் செல்லும் போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை கலவரமாக மாறியது.இந்த கலவரத்தில் இதுவரை 2 ஊர்க்காவல் படை காவலர்கள், 4 பொதுமக்கள் என 6 உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹரியானா மட்டும் இல்லாமல் டெல்லியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. அதன்படி டெல்லியில் பஜ்ரங் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் டெல்லியிலும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுஹ் மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்ட காரணத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் ஏழு மாவட்டங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது அதன்படி அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நுஹ், ஃபரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்களில் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை இணையதள சேவைகள் நிறுத்தப்படும் என சரியான அரசு தெரிவித்துள்ளது சமூக வலைதளம் மூலம் தவறான தகவல்கள் மற்றும் அதன் பரக்கப்படுவதை தடுக்க எந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hariyana riot network service stopped


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->