டெல்லியில் பரபரப்பு: ஹத்ராஸ் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி நேற்று நள்ளிரவில் கைது..! - Seithipunal
Seithipunal



உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராராவில் போலே பாபா என்ற சாமியார் பங்கேற்ற ஆன்மீக சொற்பொழிவுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பெரும்பாலானோர் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் . 

80 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று கூறி அனுமதி பெறப்பட்ட இந்த கூட்டத்தில் சுமார் 1.25 லட்சம் பேர் கூடியிருந்துள்ளனர். இதில் பலியானவர்களில் 112 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த வழக்கில் 6 பேரை ஏற்கனவே உ. பி.  போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில்  முக்கிய குற்றவாளியாக தேவ்பிரகாஷ் மதுக்கரை போலீசார் சேர்த்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவான மதுக்கர், டெல்லி உத்தம் நகரில் உள்ள நஜப்கரின் என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உ. பி. போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து நேற்று நள்ளிரவில் போலீசார் டெல்லியில் உள்ள அந்த மருத்துவமனைக்கு சென்று தேவ்பிரகாஷ் மதுக்கரை கைது செய்துள்ளனர். இதையடுத்து இவரை ஹத்ராஸ் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இன்று அவர் ஹத்ராஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படவுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

முன்னதாக தலைமறைவாகியுள்ள தேவ்பிரகாஷ் மதுக்கர் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. 1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று உ. பி. அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கைதான தேவ்பிரகாஷ் மதுக்கர் ஹத்ராஸ் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது இந்த சம்பவத்தால் உ. பி. அரசு அவரை பணியிலிருந்து நீக்கி விட்டது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hathras Incident Main Accused Arrested in Delhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->