சர்ச்சையான உத்தரவு!!!திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது தவறல்ல...!!! - நீதிபதி பிபாஸ் ரஞ்சன் - Seithipunal
Seithipunal


கொல்கத்தா உயர்நீதிமன்றம், 'திருமணமான ஆண் மற்றும் பெண் தங்கள் திருமணத்தை மீறி விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது குற்றமல்ல' என தீர்ப்பளித்தது.

அண்மையில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில், திருமணமான பெண்ணை கவர்ந்ததாக திருமணமான ஆண் ஒருவருக்கு எதிரான வழக்கு ஒன்று நீதிபதி 'பிபாஸ் ரஞ்சன்' அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி பிபாஸ் ரஞ்சன் கூறியதாவது, "ஆரம்பத்திலிருந்தே சம்மதத்துடன் கூடிய இரண்டு திருமணமான ஆண் - பெண் இடையேயான உடல் ரீதியான உறவு, வாக்குறுதியின் பேரில் ஒருவரை ஏமாற்றுவதற்குச் சமமாகாது.

அத்தகைய உறவு பரஸ்பர ஈர்ப்பு காரணமாக ஒப்புதலுடன் உருவானது என்ற அடிப்படையில் கருதப்படும்" எனத் தெரிவித்தார். எனவே குற்றம் சாட்டப்பட்ட திருமணமான ஆணுக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இது தற்போது சர்ச்சையாக மக்களிடையே கிளம்பியுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் இணையத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Having extramarital affair not wrong Justice Bipasha Ranjan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->